இந்தியா- சீனா மோதல் : ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம், அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடுகலூர் கிராமத்தில் காளிமுத்து மற்றும்லோகாம்பால் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் பழனி. இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். பெற்றோருக்கு குறைவான சம்பளம் பெற்று வந்தனர். இதனால், பழனியால் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் 18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் தான் தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 மற்றும் பிஏ பட்டம் பெற்றார். மனைவி வனிதாதேவி(33)யும் தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிகிறார்.
இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மகன் ராணுவ வீரர் கே.பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுவேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். #LadakhBorder #GalwanValley pic.twitter.com/F2vZOrGjt5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 17, 2020
இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave your comments here...