“ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் வசூல் வேட்டையா..? கே.பி.ராமலிங்கம்
திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்திருந்தார்.
இவரின் விவசாய அணி மாநில செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சேலத்தில், கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம்: மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், “ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
Leave your comments here...