வங்கி மோசடி விஜய் மல்லையாவிற்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் : இங்கிலாந்து அரசிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்..!

இந்தியா

வங்கி மோசடி விஜய் மல்லையாவிற்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் : இங்கிலாந்து அரசிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்..!

வங்கி மோசடி விஜய் மல்லையாவிற்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் : இங்கிலாந்து அரசிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்..!

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததுடன் ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.அவர் மீது சி.பி.ஐ.-யும் அமலாக்கத்துறையும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றன. மல்லையா மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில், அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அவரை நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் முயற்சித்தனர். மல்லையாவை நாடு கடத்த, லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மல்லையாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்தனர். இந்நிலையில், மல்லையா தொடர்பான வேறு சில சட்ட சிக்கல்கள் பிரிட்டனில் நிலுவையில் இருப்பதால், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், நாடு கடத்துவதில் பல்வேறு சட்ட பிரச்சினைகள் உள்ளதால் உடனடியாக நடைபெறாது என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, விஜய் மல்லையா மனிதாபிமான அடிப்படையில் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் மூன்றாவது பிரிவில் உள்ள விதியின் கீழ், அவர் தஞ்சம் கேட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இந்த விதியின்படி ஒருவரை எந்த ஒரு காரணத்திற்காகவும் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்துவது இழிவு படுத்துவது போன்றவை அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: மல்லையாவை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அவர், அரசியல் தஞ்சம் கோரினால், அதை ஏற்க வேண்டாம் என்றும் பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...