சீனாவின் டிக்டாக் செயலிக்கு குட் பை – களமிறங்கும் இந்தியாவின் “சிங்காரி” செயலி அறிமுகம்..!
- June 11, 2020
- jananesan
- : 1454
- Chingari
உலகம் முழுக்க பல கோடிக்கணக்காண ஸ்மார்ட் போன் பயணர்களை கவர்ந்துள்ளது டிக் டாக் செயலி. அதிலும் இந்தியர்கள் மத்தியில் இந்த ஆப் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக பெங்களூரைச் சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் ‘சிங்காரி’ என்கிற புதிய செயலியை கடந்தாண்டு அறிமுகப்படுத்தினர்.
இந்தச்செயலி முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் நண்பர்களுடன் மெசெஜ் அனுப்பி சாட் செய்யவும், வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்யவும் முடியும். அதோடு, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்களை உருவாக்கவும், புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், இணையத்தில் பிறவற்றை தேடி பார்க்கவும் முடியும். மேலும் சிறப்பு வசதியாக செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றையும் இந்த செயலியில் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை 2 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தக் கூடிய இந்தச் செயலிக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
Leave your comments here...