கொரோனாவால் நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை வாய்ப்பாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி
- June 11, 2020
- jananesan
- : 1303
- Narendramodi |
கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. நமது நாடு பல சவால்களைச் சந்தித்து வருகிறது, நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறோம், என இந்திய வர்த்தக சபையின் 95 வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்:- கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. நமது நாடு பல சவால்களைச் சந்தித்து வருகிறது, நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறோம், ஆனால் இன்னும் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. வெள்ளம், வெட்டுக்கிளிகள், எண்ணெய் வயல்களில் தீ, பூகம்பங்கள் மற்றும் நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சூறாவளிகள் போன்ற பிரச்னைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
Addressing the Indian Chamber of Commerce. Watch. https://t.co/5vc5Vtg7E2
— Narendra Modi (@narendramodi) June 11, 2020
இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுகிறார்கள். நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து.இந்த உலகம் நம்பிக்கையான கூட்டாளியை எதிர்நோக்கி வருகிறது. இந்தியாவுக்கு அதற்கான வலிமையும் ஆற்றலும் உள்ளது.சுயச்சார்பு இந்தியா தான் அந்த திருப்புமுனை. தற்போது, அனைத்தையும் நாம் இறக்குமதி செய்து வருகிறோம். அதனை எப்போது, மேட் இன் இந்தியாவாக மாற்ற போகிறோம். எதிர்காலத்தில், அந்த பொருட்களை நாம் எப்போது ஏற்றுமதி செய்ய போகிறோம். இந்த திசையில் நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
உற்பத்தி துறையில் மேற்கு வங்கத்தின் வரலாற்று சிறப்புகளை நாம் புதுப்பிக்க வேண்டும். ‛‛ வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ அதனை நாளை இந்தியா நினைக்கும் ‛‛ என்பதை நாம் கேட்டிருப்போம். இதனை முன் மாதிரியாக கொண்டு, நாம் இணைந்து முன்னேறுவோம்கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தர், அனைத்து இந்தியர்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில், இந்திய பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறினார். கொரோனாவிற்கு பிறகான உலகில், விவேகானந்தர் காட்டிய பாதை இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என கூறினார்.
Leave your comments here...