கொரோனா வைரஸ் ; இந்திய விமானப்படை, உள்நாட்டிலேயே தயாரித்த விமானப்படை மீட்புக் கருவி..!
தனித்தப் போக்குவரத்துக்காக விமானப்படை மீட்புக் கருவி ஒன்றை இந்திய விமானப்படை, உள் நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து, அறிமுகப்படுத்தியுள்ளது.
தனித்தப் போக்குவரத்துக்காக விமானப்படை மீட்புக்கருவி ஒன்றை இந்திய விமானப்படை, உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைதூர, தனித்த, மிகவும் உயர்வான பகுதிகளில் கோவிட்-19 உட்பட தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, நெருக்கடி நிலையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றிக் கொண்டு வருவதற்காக இந்தக் கருவி பயன்படுத்தப்படும்.
Design requirements are based on the guidelines issued by @MoHFW_INDIA, National Accreditation Board for Hospitals & Healthcare Providers (NABH) & Centre for Disease Control (CDC), USA. The IAF is inducting a total of 7 ARPITS as of now.
Read More on https://t.co/yUXMuzCZno pic.twitter.com/kDDJIGQByA— Indian Air Force (@IAF_MCC) June 8, 2020
கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டபோது கோவிட்-19 நோயாளிகள் விமானப் பயணத்தின் போது தொற்று ஏற்படக்கூடிய தூசுப்படலம் பரவுவதைத் தடுப்பதற்காக காற்றை வெளியேற்றும் முறை ஒன்று தேவை என்று இந்திய விமானப்படை எண்ணியது. இதையடுத்து இந்தக் கருவியின் முதலாவது மாதிரி 3 BRD AF ஆல் தயாரிக்கப்பட்டது.
பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுயசார்பு இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் விடுத்த அறைகூவலுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தக் கருவியைத் தயாரிப்பதற்கு உள்நாட்டுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவி 60 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இதே போன்ற கருவிகளின் விலை 60 லட்சம் ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவாகும்.
Leave your comments here...