ரூ.4.20 லட்ச வாடகை பணம் தர வேண்டாம் ; வியாபாரிகளுக்கு நெகழ்ச்சியை ஏற்படுத்திய டாக்டர்…!

இந்தியாதமிழகம்

ரூ.4.20 லட்ச வாடகை பணம் தர வேண்டாம் ; வியாபாரிகளுக்கு நெகழ்ச்சியை ஏற்படுத்திய டாக்டர்…!

ரூ.4.20 லட்ச வாடகை பணம் தர வேண்டாம் ; வியாபாரிகளுக்கு நெகழ்ச்சியை ஏற்படுத்திய டாக்டர்…!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியத் தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் கனகரத்தினம்(91). கனகரத்தினத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கனகரத்தினம், 91. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷாவும் டாக்டராக உள்ளனர். கனகரத்தினம், தனக்கு சொந்தமான இடத்தில், ஆறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வியாபாரம் இல்லாத நிலையில், ஆறு கடைகளுக்கும் மாதம், 1.40 லட்சம் ரூபாய் வீதம், மார்ச், ஏப்ரல், மே ஆகிய, மூன்று மாதங்களுக்கான, ௪.20 லட்சம் ரூபாய் வாடகையை தர வேண்டாம் என தெரிவித்து, வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.இந்த மனிதநேய செயலை, அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து டாக்டர் கனகரத்தினம் கூறுகையில், ”கொரோனா நிவாரண நிதியாக, முதல்வர் நிவாரண நிதிக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கினேன். ”வியாபாரிகள் கஷ்டப்படும் போது, அதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வோம் என்று, மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம்,” என்றார்.

Leave your comments here...