சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க குடிநீர் வழங்கல் துறையுடன் புதிய திட்டம் ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு..!
- August 31, 2019
- jananesan
- : 906
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாகும். இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சென்னை ஆணையாளர் பிரகாஷ், தலைமையில் சென்னை குடிநீர் வழங்கல் துறையின் இயக்குநர் ஹரிகரன் முன்னிலையில் துணை ஆணையாளர்கள் கோவிந்தராவ், மதுசூதனரெட்டி, ஸ்ரீதர், ஆல்பிஜான், திவ்யதர்சினி, குமரவேல்பாண்டியன், முதன்மை பொறியாளர் புகழேந்தி, தலைமை பொறியாளர்கள் ராஜேந்திரன், மகேசன், காளிமுத்து, நந்தகுமார், துரைசாமி, கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணபவானந்தம், ஜெயராமன், பாலசுப்பிரமணியம், விஜயகுமார், வீரப்பன், உதவி ஆணையாளர்கள், ராமமூர்த்தி, நடராசன், பரந்தாமன், விஜயகுமார், சசிகலா, ராஜசேகரன், பாஸ்க்கர், சுகுமார், நேருக்குமார், சங்கர் தேவேந்திரன், தமிழ்செல்வன், செயற்பொறியாளர்கள் பெரியசாமி, சின்னத்துரை , திருமுருகன் , செந்தில்நாதன், முருகன், பால்தங்கத்துரை, சுந்தரேசன், புவனேஷ்வரன், நாச்சன், சுந்தரேசன், முரளி , புகழேந்தி, சுபாஷ் வரதராஜன், சுந்தர்ராஜன், ஸ்ரீகுமார், தமிழ்அழகன், சரவணன், பிரதீப்குமார், ராம்மூர்த்தி, காமராஜ், பானுக்குமார், சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், சொக்கலிங்கம், உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினார்.
பருவ மழை துவங்க உள்ள நிலையில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் உறை கிணறுகள் அமைக்கும் பணிகளை விரைந்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திடவும் பயன்பாடற்று உள்ள சமுதாய கிணறுகளை கண்டறிந்து மழைநீர் இணைப்புகள் ஏற்படுத்தவும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள், இதுவரை 2,72,061 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு செய்துள்ளன. இதில் 1,62,284 கட்டடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட வேண்டிய நிலையில் உள்ள 38,507 கட்டட உரிமையாளர்களுக்கு அப்பணிகளை ஒரு வாரக்காலத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 69,490 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். இக்கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 238 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிணறுகளை புனரமைக்கும் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இதுவரை 339 இடங்களில் உரைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 4 அடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளான பொறியாளர்கள் ஆறுமுகம், ஜாண்லால், ராமசாமி, நரசிம்மன், கந்தசாமி, நெல்சன், ஏரியா இஞ்சினியர்கள், சிவமுருகன், செல்லமணி, பாவை, சுதாகர், குளிர்ந்தராஜ, ரவீந்திரநாத், பன்னீர், புகழேந்தி, கல்யாணி, விஜயகுமாரி, நரசிம்மன், ஜகநாதன், உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்