மேற்கவங்கத்தில் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு திட்டம்

இந்தியா

மேற்கவங்கத்தில் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு திட்டம்

மேற்கவங்கத்தில்  ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு திட்டம்

மேற்கு வங்க ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க 15-வது நிதிக்குழுவின் மானியத்தில் ரூ.4,412 கோடியை மேற்கு வங்க மாநிலம் பெறும் என கூறியுள்ளது.

மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக, ‘ ஜல்ஜீவன் இயக்கம்’ மத்திய அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் போதிய அளவு தரமான தண்ணீரை வழக்கமாகவும், தொலைநோக்கு அடிப்படையிலும் குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான உணர்வைப் பின்பற்றும் வகையில், கிராமப்புற மக்களுக்கு வீட்டு வாசலிலேயே குடிநீர் வழங்கி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் துன்பத்தைப் போக்கும் இந்த ஜனரஞ்சக திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் இந்த இயக்கம் சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய என்னும் குறிக்கோளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதாவது, கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஜல்ஜீவன் இயக்கம் சேவை விநியோகம் என்பதுடன், உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கும் வழிவகுக்கும்.15-வது நிதிக்குழுவின் மானியத்தில் ரூ.4,412 கோடியை மேற்கு வங்க மாநிலம் பெறும். இதில் 50 சதவீதத்தை குடிநீர் மற்றும் தூய்மை திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

Leave your comments here...