இந்தியா
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 36ஆயிரத்து, 400 கோடி ரூபாய் விடுவிப்பு.!
மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 36ஆயிரத்து, 400 கோடி ரூபாய் விடுவித்தது.
கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல்- நவம்பர் மாதங்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 1,15,096 கோடியை விடுத்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36 ஆயிரத்து 400 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...