காயங்களுக்கு மூலிகை மருத்துவ துணிக்கட்டை உருவாக்கிய விஞ்ஞானிகள்.!
- May 31, 2020
- jananesan
- : 1216
- Smart bandage
அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டு ஆய்வு மையம் (IASST) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். இந்த மையத்தின் விஞ்ஞானிகள் ஸ்மார்ட் துணிக்கட்டை உருவாக்கியுள்ளனர். இது காயங்களுக்குப் பொருத்தமான பிஎச் அளவுடன் கூடிய மூலிகை மருந்து துணிக்கட்டாகும். மலிவான மற்றும் நீடித்த நிலையான பருத்தியையும், சணலையும் நேனோ தொழில்நுட்ப அடிப்படையில் இணைத்து இந்தத் துணிக்கட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இயற்கையான சணல் மற்றும் வேப்பிலைச் சாறுகளை மருந்தாகப் பயன்படுத்தி காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இந்தத் துணிக்கட்டில் ஹைட்ரோஜெல்மேட்ரிக்ஸ் பருத்தித் துணியில், சணல் கார்பன் புள்ளிகள், பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் காயங்களில் மருந்தை குறைவான அளவிலும் (பிஎச்5) மற்றும் அதிகமான (பிஎச்7) அளவிலும் கச்சிதமாகச் செலுத்த முடியும்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, காயங்களுக்கு ஸ்மார்ட் துணிக்கட்டு போடுவதற்கு வழிவகுத்துள்ளது. மலிவான மற்றும் நீடித்த பருத்தி மற்றும் சணலைப் பயன்படுத்தி, இந்தத் துணிக்கட்டு உருவாக்கப்படுவதால், இந்தத் தயாரிப்பு முறை உயிரி இசைவாகவும், நச்சுத்தன்மையற்றதாகவும், மலிவானதாகவும், நீடித்த மற்றும் நிலையானதாகவும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு: டாக்டர்.தேவாசிஸ்சவுத்திரிdevasish@iasst.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Leave your comments here...