ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

தமிழகம்

ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள விசாரணை அறைகளிலிருந்தே வழக்குகளை விசாரிக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதிகள் தங்கள் லேப்டாப் அல்லது ஐ-பாடை நீதிமன்றத்திற்கு கொண்டு வர தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உரிய பாதுகாப்புடன் நேரடியாக வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என பார்கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆன்லைன் முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்யும் நடைமுறை தொடர வேண்டிய நிலை நீடிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...