இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

அரசியல்இந்தியாதமிழகம்

இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’ என்ற ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதாவது 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்டுள்ளது.மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள்.

மேலும், மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனமாக மாற்றப்படுவதால், சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன், மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும்.

மின்சார திருத்த சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவும், மின்சாரத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், விவசாயிகளும், நெசவாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரமும் இந்த புதிய சட்டத்தால் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்கும், மாநிலத்தின் உரி மைகளுக்கும் மிகப் பெரிய ஆபத்து எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் பொதுக் கருத்தை உரு வாக்கி மாநில உரிமைகளை பாதுகாக்க அதிமுக அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றி கொள்ளவில்லையென்றால் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சமூக விலகலை கடைபிடித்து கையுறை அணிந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கான பணியை தமிழ்நாடு முஸ்லிம் லீக் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave your comments here...