மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு ; 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழகம்

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு ; 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு ; 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதுமே கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி வீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணம் மட்டும் பக்தர்கள் இன்றி சிவாச்சார்யர்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி (மே 4) காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறி முறைகளைப் பின்பற்றி நடத்திவைத்தனர்.இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது, திருக்கல்யாணம் குறித்து சிலர் அவதூறாக கருத்துகளை முகநூலில் பதிவிட்டு, சமய நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அரவிந்தன் ரஜினி, சிவசிவா, மனோகரன், செல்வேந்திரன், ஆன்டோ லியோனி சைக்கிள் பிரான்ட், கலீம் முகமது ஆகியோரது பெயர்களை கொண்ட முகநுாலில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தார்.இது தொடர்பாக ஈரோடு புதுக்கோட்டை ,திண்டுக்கல், கோவையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மதுரை போலீசிற்கும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆன்லைனில் புகார்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன.

இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மத நம்பிக்கைளை புண்படுத்தும் செய்கைகளை செய்தது, ஒரு சமூகத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் மீனாட்சி அம்மன் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave your comments here...