அம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு ; கொரோனா வைரசை விட, அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது- -மம்தா பானர்ஜி

இந்தியா

அம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு ; கொரோனா வைரசை விட, அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது- -மம்தா பானர்ஜி

அம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு ;  கொரோனா வைரசை விட, அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது- -மம்தா பானர்ஜி

‘அம்பான்’ புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே, இன்று(மே 20) இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.அம்பன் புயல் கரையைக் கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. மேற்குவங்க கடலோரத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.


இதுதொடர்பாக அம்மாநில- முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா. மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.


மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம்.ஒருபுறம் கொரோனாவுடன் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக தற்போது புயல். அம்பன் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இச்சூழலில் மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டுகிறேன்.இச்சூழலில் அரசியல் செய்வதை விடுத்து, மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து, மக்களை காக்க வேண்டுகிறேன் புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி இருக்கும் என கருதுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...