மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்..!
கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்ள ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், சுகாதார துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள 12 அம்மா உணவகங்களில் ஏழை மக்களுககு சுவையாக உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நேற்று வரை 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் 2,62,331 பேர் இலவசமாக உணவு சாப்பிட்டுள்ளார்கள்.கொரோனா தடுப்புக்காக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதனால் வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் வட மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசு , தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் பேரிடர், மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.உடன் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் இருந்தனர்.
Leave your comments here...