தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளும் அறிவிப்பு – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.
மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும் வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம்.
தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்படுவதற்கான தடை தொடரும்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே வரும் 31-ம் தேதி வரை தொடரும்.
தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பார்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள் போன்றவை இயங்குவதற்கான தடை தொடரும்
சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம்.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும்.
5 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதி
50% பணியாளர்களை 100% பணியாளர்களாக உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.
வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் மே 31ம் தேதி வரை மூடி இருக்க தமிழக அரசு உத்தரவு
100 நாள் வேலைதிட்டத்தில் 100% பணியாளர்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது.
வேளாண், வியாபாரம், மருத்துவம், போன்ற பணி நிமித்த பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அரசு பணிகளுக்காக பேருந்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தனியார் தொழிற்சாலை பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,நீலகிரி மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
இன்று நள்ளிரவு 12 மணியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மக்கள் மாஸ்க் அணிவது, சமூக விலகல் கடைபிடிப்பது, சோப்மூலம் கைகள கழுவும் நடைமுறையை பின்பற்றவும் போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனரகள் அறிவுரைபடுத்தப்படுகிார்கள். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நோய் தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறைய குறைய தமிழக அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...