எதிர் எதிரே லாரிகள் மோதல் : உத்திரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்தர் தொழிலாளர்கள் 24 பேர் பலி..!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனாலும், சில தொழிலாளர்கள் நடந்தோ, லாரியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரெயில்களில் அவர்களை அனுப்பி வைத்து வருகிறது. இது தவிர்த்து அவர்களுக்கான உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது.
இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை அடைந்த திருப்தியில் உள்ளனர். அவர்களுக்கான பயண செலவுகளை ஏற்கவும் சில மாநில அரசுகள் முன்வந்தன.எனினும், முறையான அடையாள அட்டை இல்லாதது அல்லது ஊருக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்படுவது ஆகிய காரணங்களால், சிலர் கிடைத்த வாகனங்களை பிடித்து பயணம் செய்கின்றனர்.
Heartbreaking footage from the accident spot in UP’s Auraiya , where 24 workers died earlier this morning in an accident involving the truck they were travelling in … pic.twitter.com/wjwfYhullG
— Alok Pandey (@alok_pandey) May 16, 2020
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உ.பி., மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...