ராணுவ கேண்டின்களில் வெளிநாட்டு பொருட்களுக்கு குட்பை..! இனிமேல் சுதேசி பொருட்களுக்கு மட்டுமே விற்பனை – வெளியானது அறிவிப்பு
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை 3 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (மே-12 ) 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. உள்நாட்டு பொருட்களுக்கு இந்திய மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவது மட்டும் தான் 21ம் நூற்றாண்டை இந்தியாவுக்கு சொந்தமானதாக மாற்றுவதற்கான வழி. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் மாற்றங்கள் மக்களின் மன வலிமையை வெளிக்கொணர்ந்துள்ளது. உட்கட்டமைப்பை இந்தியாவின் புதிய அடையாளமாக மாற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற நம்மை நாமே பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்,
இந்த நிலையில், இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவின், ‘டுவிட்டர்’ பதிவில், கூறப்பட்டுள்ளதாவது: ‘கொரோனா பாதிப்பில், நாடு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இது, இந்தியாவை உலகின் தலைமைக்கான பாதையில், நிச்சயம் கொண்டு செல்லும்’ என, பிரதமர், மோடிகூறியுள்ளார்.
कल माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने देश को आत्मनिर्भर बनाने और लोकल प्रोडक्ट्स (भारत में बने उत्पाद) उपयोग करने की एक अपील की जो निश्चित रूप से आने वाले समय में भारत को विश्व का नेतृत्व करने का मार्ग प्रशस्त करेगी। pic.twitter.com/KlYD9Z7UVt
— Amit Shah (@AmitShah) May 13, 2020
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் (விற்பனை நிலையங்கள்) வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்து உள்ளார். மேற்கண்ட படைப்பிரிவுகளில் பணியாற்றும் 10 லட்சம் பேரின் குடும்பங்களில் மொத்தம் 50 லட்சம் பேர் இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
इसी दिशा में आज गृह मंत्रालय ने यह निर्णय लिया है कि सभी केंद्रीय सशस्त्र पुलिस बलों (CAPF) की कैंटीनों पर अब सिर्फ स्वदेशी उत्पादों की ही बिक्री होगी। 01 जून 2020 से देशभर की सभी CAPF कैंटीनों पर यह लागू होगा। इससे लगभग 10 लाख CAPF कर्मियों के 50 लाख परिजन स्वदेशी उपयोग करेंगे।
— Amit Shah (@AmitShah) May 13, 2020
நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், “உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்,” என்றார்.
துணை ராணுவத்தினரின் கேன்டீன்களில், ஆண்டு தோறும், 2,800 கோடி ரூபாய் மதிப்பில், பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவோர், அதன் நன்மை குறித்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து, ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்து உள்ளார்
Leave your comments here...