லடாக் பகுதியில் அத்துமீறும் சீனா ; பதிலடி தர சுகோய் போர் விமானங்களை களம் இறக்கிய இந்தியா..!

இந்தியாஉலகம்

லடாக் பகுதியில் அத்துமீறும் சீனா ; பதிலடி தர சுகோய் போர் விமானங்களை களம் இறக்கிய இந்தியா..!

லடாக் பகுதியில் அத்துமீறும் சீனா ;  பதிலடி தர சுகோய் போர் விமானங்களை களம் இறக்கிய இந்தியா..!

இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா, இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கிவிட்டது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வூஹானில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுதலுக்கு சீனாவின் அலட்சியமே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆதரவு தருகிறது.

அதே நேரத்தில் சீனாவில் மறைக்கப்பட்ட கொரோனா பாதிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயற்சித்து வருகிறது.தொடர்ந்து, சீனா மீதான அதிப்தியால் பல நிறுவனங்கள் சீனாவில் உள்ள தனது நிறுவனங்களை தங்களது சொந்த நாடுகளுக்கும் மற்ற பிற நாடுகளிலும் நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளது. இவற்றில் ஜப்பான் முதலாவதாக பல மில்லியன் செலவழித்து தங்களது நாட்டிற்கே நிறுவனங்களை மாற்றும் முயற்சியில் களமிறங்கியது. இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் பலரும் இந்தியாவில் தங்களது நிறுவனத்தை அமைக்க விரும்புவதாக தகவல்கள் வெளியானது. இந்திய அரசும் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக இந்தியா மீது சீனா கடும்கோபத்தில் உள்ளது.

இந்தியாவும், சீனாவும் சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூர எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டுள்ள சூழலில், சில இடங்களில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதால், இந்தியா – சீனா இடையே பதற்றம் ஏற்பட்டது. சுமார் 73 நாட்களுக்‍கு பின்னரே பதற்றம் முடிவுக்‍கு வந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறியது. அதையொட்டி, சிக்கம் மாநில எல்லையில் சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன் நடுஇரவில் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்போதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சண்டை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. ஏற்கனவே எவரெஸ்ட் சிகரம் தொடர்பாக வரைபடத்தை மாற்றி சீனா பல மோசடிகளை செய்தது. இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் எல்லை மீறியதாகவும் மே.,5 ல் சீன விமானங்கள் லடாக் எல்லைக்குள் புகுந்தது.

இதையொட்டி, இந்திய சுகோய் விமானங்கள் ரோந்து பணியில் சென்றதால் சீன விமானங்கள் வெளியேறிவிட்டது. ஆயினும் தொடர்ந்து சீனா அத்துமீறி நுழைவது தொடர்கதையாக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக நிற்கும்போது சீனா தற்போது இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது

Leave your comments here...