காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்

இந்தியாதமிழகம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாத தாக்குதலில் போது துணை ராணுவ வீரரான தமிழகத்தை சந்திரசேகர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பாயங்கரவாத சம்பவங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளதுடன் ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் என 5 பேர் வீர மரணமடைந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் இன்று ரோந்து சென்ற பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகவும் 7 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு நாள் முழுமையாக முடிவடையாத நிலையில் இரண்டாவது முறையாக அங்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த CRPF வீரர்களில் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அஷ்வானி குமார் யாதவ், பீகாரின் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா ஆகிய இருவரும் உயிரிழந்து உள்ளனர்.


மேலும் வீர மரணம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!’ என்று கூறியுள்ளார்.

Leave your comments here...