வாகனத்தில் தவற விட்ட 31 ஆயிரம் ரூபாயை, மீட்டு கொடுத்த விழுப்புரம் போலீசார்..!
விக்கிரவாண்டி அருகே கேஸ் வாகனத்தில் தவற விட்ட 2 நபர்களின் 31 ஆயிரம் ரூபாயை, மீட்டு கொடுத்த உள்ளனர் விழுப்புரம் போலீசார்.
கொரோனா பீதி காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் 3-ம் கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி இருக்கிறது. அதன்படி, கடந்த 40 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் நேற்று அமலானது.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து தொழிலாளர்கள் கேஸ் வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்ற போது ஓங்குர் சோதனை சாவடியில் காவல்துறை சோதனைக்கு பயந்து அவசரமாக நள்ளிரவில் கீழே குதித்து தப்பி ஓடினர்.
பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையை தவற விட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்து உடனே அங்கிருந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே அடுத்த விக்கிரவாண்டி சோதனை சாவடியில் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி தலைமையில் அந்த கேஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 2 பைகளில் இருந்த 29 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Leave your comments here...