அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்..!
- May 4, 2020
- jananesan
- : 1738
- AGNI
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை இன்று அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்று வீசும்.ஆனாலும், வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத, தமிழக உள் மாவட்டங்களில், சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் எகிறலாம். எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும்.
Leave your comments here...