கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: இந்தியாவிற்கு 7 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை அனுப்பிய யுஏஇ
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: இந்தியாவிற்கு 7 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது ஐக்கிய அமீரக அரபு அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வடைந்து உள்ளது. 9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ல் இருந்து 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் தேவை அதிகரித்ததால், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், கொரோனாவின் தாக்கத்தை சமாளிப்பதற்காக பல்வேறு நாடுகளும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்காக இந்தியாவின் உதவியை நாடி இருந்தான. இதைத்தொடர்ந்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை இந்தியா நீக்கியது. அதன்பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட 87 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்து இருந்தது.
இந்நிலையில் நட்புறவு நாடானா யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக அரபு நாடு, சுமார் 7 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
UAE sends medical aid to India in fight against COVID-19 https://t.co/i4ZXtHpClI via @wamnews_eng
— UAE Embassy-Newdelhi (@UAEembassyIndia) May 2, 2020
இது குறித்து இந்தியாவிற்கான யு.ஏ.இ. தூதர் அஹமது அப்துல் ரஹ்மான் கூறியது, யு.ஏ.இ., அரசு அனுப்பியுள்ள மருந்து பொருட்கள் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெரிதும் உதவும். இது இந்தியா – யு.ஏ.இ. இடையே நிலவி வரும் ஆழமான மற்றும் சகோதரத்துவமான நட்புறவுகளை அங்கீகரிப்பதாகும் என்றார்.
دولة الإمارات ترسل مساعدات طبية إلى الهند لتعزيز جهودها في مكافحة انتشار (كوفيد-19).https://t.co/m4wAEF2jaC pic.twitter.com/yDkHidaIzk
— وزارة الخارجية والتعاون الدولي (@MoFAICUAE) May 2, 2020
Leave your comments here...