தொண்டையில் இருக்கும் வைரசை அழிக்கும் : அதனால் மதுகடைகளை திறக்க வேண்டும் – காங்கிரஸ் எம்எல்ஏ புதிய சர்ச்சை..!!

இந்தியா

தொண்டையில் இருக்கும் வைரசை அழிக்கும் : அதனால் மதுகடைகளை திறக்க வேண்டும் – காங்கிரஸ் எம்எல்ஏ புதிய சர்ச்சை..!!

தொண்டையில் இருக்கும் வைரசை அழிக்கும் : அதனால் மதுகடைகளை திறக்க வேண்டும் – காங்கிரஸ் எம்எல்ஏ புதிய  சர்ச்சை..!!

கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதைப் பற்றி நிறைய வீண் வதந்திகள் பரவி வருகின்றன. ஏனெனில் எப்படியாவது அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே எல்லாருடைய நோக்கமாக இருக்கிறது. இதனால் வலைதளங்களில் கிடைக்கும் தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை அவர்கள் அலசிப் பார்ப்பது கூட இல்லை. சிக்கன், மட்டன் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுவது கொரோனா வைரஸை பரப்பும் போன்ற தவறான கருத்துக்களை நம்பி வருகின்றனர். தற்போது மது அருந்துவதால் கொரோனா வைரஸ் தடுக்க முடியும் என்ற வதந்தி வேறு பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆங்காங்கே மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதும் போலீசார் அவர்களை கைது செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், தொண்டையில் இருக்கும் வைரசை அழிக்க, மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காங்., எம்எல்ஏ பாரத் சிங் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கையில் :- ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் மதுக்கடைகள் மூடியிருப்பது அரசுக்கு பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.


மது குடிப்பது தொண்டையில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும். ஆல்கஹால் நிறைந்த சானிடைசர்களை கொண்டு கழுவும்போது கைகளில் உள்ள கொரோனா வைரஸ் நீக்கப்படும் என்றால் ஆல்கஹால் நிறைந்த மது குடித்தால் அது தொண்டையில் உள்ள வைரஸையும் நிச்சயம் நீக்கும். எனவே மதுக்கடைகளை மட்டும் திறக்க வேண்டும்” என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments here...