அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை சோதனை செய்யவேண்டாம் – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது, சரக்கு வாகனங்கள் எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும், உள்ளூர் அதிகாரிகள் நுழைவு சீட்டு கேட்பதாகவும் புகார்கள் வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், வெளி மாநிலங்களிலிருந்து சரக்கு ஏற்றி வரும் லாரிகள், வாகனங்கள் பிற மாநிலங்களுக்குள் நுழையும்போது போலீசாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக தலைமைச் செயலர் அஜய் பாஹ்லா, அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில்,, “வெளிமாநிலங்களில் இருந்து சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்களைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சோதனை என்ற பெயரில், சரக்கு வாகனங்களின் ஒட்டுநர்களுக்கு தொந்தரவு தருவதாக தெரிகிறது. போலீஸார் இதனை தவிர்க்க வேண்டும்.
சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களில் 2 ஓட்டுநர்கள், ஒரு உதவியாளர், முறையான உரிமம் ஆகியவை இருந்தால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது” என்று தமது கடிதத்திவ் உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...