சோகத்தில் பாலிவுட்…! நேற்று இர்பான் கான்…. இன்று ரிஷி கபூர்
- April 30, 2020
- jananesan
- : 1209
- RishiKapoor |
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் (வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் நடிகருமான ரந்தீர் கபூர் இந்த செய்தியை பி.டி.ஐ.க்கு உறுதிப்படுத்தினார். ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புற்றுநோய் உள்ளது, அவருக்கு மூச்சுத் திணறல் உள்ளது. தற்போது அவரது உடல் நிலைசீராக உள்ளது என ரந்தீர் கபூர் கூறினார்.கிட்டத்தட்ட ஒரு வருடம் அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பின்னர் ரிஷிகபூர் கடந்த செப்டம்பரில் இந்தியா திரும்பினார்.பிப்ரவரி மாதம், ரிஷி கபூர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரிஷி கபூர் ஏப்ரல் 2 முதல் தனது டுவிட்டர் கணக்கில் எதையும் வெளியிடவில்லை. பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 68 வயது ஆகிறது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார்.
ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் இர்பான்கான் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.நேற்று நடிகர் இர்பான் கான் மரணமடைந்த துயரத்தில் இருந்து மீளாத பாலிவுட் பிரபலங்களுக்கு ரிஷி கபூரின் மறைவு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.
Leave your comments here...