கொரோனா தடுப்பு பணி – பாதிக்கப்பட்டவர்களை காக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியா

கொரோனா தடுப்பு பணி – பாதிக்கப்பட்டவர்களை காக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

கொரோனா தடுப்பு பணி – பாதிக்கப்பட்டவர்களை காக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

கொரோனா தடுப்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது; பாதிக்கப்பட்டவர்களை காக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஆர்எஸ் எஸ் தொண்டர்களுக்கு இணையவழியில் உரையாற்றினார் அப்போது பேசிய அவர்:- கொரோனா தடுப்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது; பாதிக்கப்பட்டவர்களை காக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சாதுக்கள் இருவரும் அப்பாவிகள். இந்த விவகாரத்தில் கிராமவாசிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். அவ்வாறு செய்யக்கூடாது. இந்தச் சம்பவத்தில் இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்வதை விடுத்து, அப்பாவிகள் கொல்லப்படுவது சரியா என்பதை சிந்திக்க வேண்டும். வன்முறையை தூண்ட எப்போதும் சிலர் விளைவிக்கின்றனர். அவர்களிடம் இருந்து நாம் விலகி இருக்கவேண்டும். வன்முறையை தூண்டிவிடுவதில் சிலர் நிபுணர்கள். சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வன்முறையை தூண்டுவதே அவர்களின் உத்தி.


நமது நன்மைக்காகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுக்கு நாம் ஒத்துழைப்பு இந்த வழங்க வேண்டும் நெருக்கடியான சூழலில் இருந்து நாம் பாடம் கற்று நம்மிடையே மாற்றங்களை கொண்டு வரவேண்டும். நம்மை குறித்து சிந்திக்க இதுவே தக்க தருணம் ஆகும்.இந்த நேரத்தை வீட்டில் இருந்தபடி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளவும். மத்திய அரசு காலதாமதமின்றி உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் கொரோனா நோய்த்தொற்று பரவலானது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கட்டுப்பாட்டில் உள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள 55,000-க்கும் அதிகமான பகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மக்களுக்கு உதவிபுரியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வேளையில் நற்பெயரையும் எதிர்பாராமல் பிறருக்காக நாம் பணியாற்ற வேண்டும். சுற்றுச்சூழல் மீது அக்கறை அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி உள்ளிட்ட பொருள்களின் பயன்பாட்டை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். இது நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு சுற்றுச்சூழலையும்,இயற்கையையும் நாம் பாதுகாக்க வேண்டிய தருணமாகும் என கூறியுள்ளார் மோகன்பாகவத்.

Leave your comments here...