கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதற்கிடையே, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Here is #MannKiBaat April 2020. https://t.co/tkteUgjck9
— Narendra Modi (@narendramodi) April 26, 2020
இதுதொடர்பாக அவர் கூறுகையில்:- இதுபோன்ற தருணங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவ முன்வருகின்றனர். இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும்.
அது தொழில், அலுகலகம், கல்வி மற்றும் மருத்துவம் என எந்த பிரிவாகட்டும். கொரோனா வைரசுக்கு பின்னான உலகத்தில் ஒவ்வொருவரும் மாற்றங்களுக்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். கொரோனா வைரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரராக செயல்பட்டு போராடி வருகிறார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் போன்றவர்களின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம்.
நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை.நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்
Leave your comments here...