2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் – ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால். கரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. கரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம்.கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது
Since March 27, the macroeconomic and financial landscape has deteriorated precipitously in some areas, but light still shines through bravely in some others: Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das pic.twitter.com/dO21SnhVdF
— ANI (@ANI) April 17, 2020
2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது.
Contraction in exports in March 2020 at 34.6%, turned out to be much more severe than during the Global Financial Crisis. However, amidst all this, the level of Forex Exchange Reserves which we have continue to be robust: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/yANpNYo75o
— ANI (@ANI) April 17, 2020
உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம். கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது.ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும். நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்படும்.
It has been decided to provide special refinance facilities for an amount of Rs 50,000 crores to National Bank for Agriculture & Rural Development, Small Industries Development Bank of India, and National Housing Bank to enable them to meet sectoral credit needs: RBI Governor pic.twitter.com/THfzm2O4qm
— ANI (@ANI) April 17, 2020
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரிசவ் வங்கி முழுமையாக தயாராக உள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சாரத் தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ 0.25% குறைப்பு: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கும் தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
Leave your comments here...