ஊழியர்கள் யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம் – பிரதமர் மோடி

இந்தியா

ஊழியர்கள் யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம் – பிரதமர் மோடி

ஊழியர்கள் யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம்   – பிரதமர் மோடி

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள், திரை அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.


கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஏப்., 20 வரை கண்டிப்புடன் ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.டிவி மூலம் அவர் பேசியதாவது: உலக நாடுகளை விட கொரோனாவை எதிர்த்து, இந்தியா போரிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500 ஆக இருந்தது. இந்த நடவடிக்கை எடுக்காவிடில், நிலைமை எப்படி இருக்கும் என எண்ணி பார்த்திருக்க முடியாது. ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உரிய நேரத்தில், உரிய முடிவு எடுக்காமல் இருந்திருந்தால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன. ஊரடங்கு சமயத்தில் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. ஊரடங்கை நீட்டிப்பது என்று பல மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியம். வரும் ஊரடங்கு காலத்திலும் மக்கள் கவனமுடன் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரவும் அபாயம் பகுதிகளில் கண்காணிப்பு அவசியமாகிறது. ஏப்.,20 வரை ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்., 20க்கு பிறகு தளர்வு கொண்டு வரப்படும். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றார்.

Leave your comments here...