‘ஸ்ட்ரான்டட் இன் இந்தியா’ வலைதளம் மூலம் 1194 சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி

இந்தியா

‘ஸ்ட்ரான்டட் இன் இந்தியா’ வலைதளம் மூலம் 1194 சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி

‘ஸ்ட்ரான்டட் இன் இந்தியா’ வலைதளம் மூலம் 1194 சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ’’StrandedinIndia’’ வலைதளம் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வரை இதன் மூலம் உதவி பெற்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1194. இதுதவிர, சுற்றுலா அமைச்சகத்தின் 1363 என்ற கட்டணமில்லா உதவி மையத்தின் மூலம், மார்ச் 22 முதல் ஏப்ரல் 9 வரை 779 அழைப்புகள் வந்துள்ளன.


சுற்றுலா அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திருமதி. மீனாட்சி சர்மா, இந்திய சாகச சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசினார். பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதே நாட்டின் முன்னுரிமைத் தேவை என்று அவர் கூறினார். இந்த சிக்கலான தருணத்தில், விளிம்பு நிலை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும், அவர்களுக்கு உதவத் தேவையான அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

முகாம்களை கிருமிநாசினியால் சுத்திகரிப்பது எப்படி, மலை ஏறுவதற்கான விடுதிகளை எவ்வாறு இயக்குவது மற்றும் அது தொடர்பான விஷயங்களில் அமைச்சகம் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டது. விதிமுறைகளின் அவசியத்தை திருமதி. சர்மாவும் ஏற்றுக்கொண்டார்.

Leave your comments here...