டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு – மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலருக்கும், அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியா

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு – மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலருக்கும், அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு  – மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலருக்கும், அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதீனில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மாநாட்டை நடத்த வேண்டாம் என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத்திடம் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை புறக்கணித்த முகமது சாத் மாநாட்டை நடத்தி, கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணியாக மாறி உள்ளார்.

டெல்லியில் உள்ள மற்றொரு முஸ்லிம் மதப் பிரிவான ஷுரா இ ஜமாத்,கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. ஆனால் ஆலோசனைகளை புறந்தள்ளி தப்லீக் ஜமாத் மாநாட்டை முகமது சாத் நடத்தியுள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தசமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரித்த போது போலீசாரிடம் அவர் உண்மையை மறைத்துள்ளார். தற்போது அதிக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

அவரது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டில்லியில் உள்ள தீன்பூர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் வசித்த பகுதியில் இருந்த 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை நடைபெறுகின்றது.தொழில்நுட்ப அடிப்படையில் டில்லி போலீசார் இவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்துள்ள 22 இடங்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களின் தொடர்புகளை கண்டறிய 10 ஆயிரம் மொபைல்களை டிரேஸ் செய்துள்ளனர்.

Leave your comments here...