மோடிக்கு கடிதம் : நடிகர் கமலஹாசனுக்கு சரமாரி கேள்வி கேட்டு அர்ஜூன் சம்பத் கடிதம் …!
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்தது உள்ளார்.
இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் :- நாடு முழுக்க இருக்கக்கூடிய மக்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கொராணா வைரஸ் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கின்றார்கள். ஆனால் தாங்களோ கொராணா எதிர்ப்பில் இருந்து விலகி, மோடி எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறீர்கள்.
மக்களின் உயிர்காக்கும் விஷயத்திலும் தங்களின் மைய அரசியலிலிருந்து விலகி தேச விரோத அர்பன் நக்சல்களின், கிருத்துவ தொண்டு நிறுவனங்களின், இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளின், குரலை ஓங்கி ஒலிக்கின்றீர்கள். வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், கேப்டன் விஜயகாந்த் அவர்களும் தங்களைப் போலவே நடிப்பு உலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கட்சித் தலைமையகத்தை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றும் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மெழுகுவர்த்தி ஏந்தி தனது ஒத்துழைப்பை வழங்கியு ரஜினி மக்கள் மன்றம் அன்னதானம் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறது.
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு @PMOIndia @narendramodi pic.twitter.com/LvgVUgUZYz
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2020
சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு நடிகரும் அரசியல்வாதியும் பொறுப்புணர்வோடு செயல்படுகின்றார்கள். ஆனால் தாங்களோ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் கொரானா நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளீர்கள்.உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் கூட கொராணா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தோற்றுப்போய் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.சீனாவில் தோன்றிய இந்த கொராண வைரசை எதிர்த்து வென்றிட சார்க் நாடுகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் பிரதமர் மோடியை குறை சொல்கிறீர்கள்.
நீங்கள் ஈவேராவை பின்பற்றினாலும், அண்ணல் காந்தியை பின்பற்றினாலும், அவர்களை என் தலைவர்கள் என்று சொன்னாலும்,அவர்கள் இப்போது இருந்திருந்தாலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளைப் பாராட்டி இருப்பார்கள். ரொட்டிக்கு எண்ணை வாங்க காசில்லாமல் ஏழைகள் அலையும்போது பணக்காரர்களை வைத்து விளக்கு ஏற்றி இருக்கீங்க, பால்கனி அரசியல் செயறீங்க, என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள். குறையே இல்லாதவனை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்.ஆனால் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழைகளும், இல்லாதவனும் பட்டினியால் மாண்டு விடக்கூடாது என்பதற்காக மோடி கிச்சன் துவக்கி அனைவருக்கும் உணவளிக்க பாரதிய ஜனதா கட்சி தன் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேருக்காவது உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தொண்டு செய்து வருகிறது.
மக்கள் நீதி மையம் இதுவரை என்ன சேவை செய்துள்ளது. யாருக்காவது உணவு கொடுக்கும் திட்டம் உங்களிடம் உண்டா? தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?
எத்தனை காலத்திற்கு இப்படி தேச விரோதிகளுக்கும், நக்சல்களுக்கும், நீங்கள் துணைபோக போகிறீர்கள்! பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறி உள்ளீர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகத்தான் கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ஏழைகளின் சேமிப்பு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பாரதப் பிரதமர் மோடியின் லாக் டவுன் நடவடிக்கை நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் கொரானா வைரசை இந்தியாவில் பரப்பியவர்கள் முழு அடைப்பு நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.தப்லீக் ஜமாஅத்தின் தலைவர் தலைமறைவாக இருக்கிறார். அவரது கருத்தை எண்ணத்தை நீங்களும் அறிக்கையாக கொடுத்திருக்கிறீர்கள். எப்படியாவது லாக் டவுன் நடவடிக்கையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற உங்கள் நோக்கம் வெற்றி பெறாது.உங்களால் முதலாளிகள் என்றும், பணக்காரர்கள் என்றும், விமர்சிக்கப்படுகின்ற டாடா,அம்பானி போன்றோர் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் உங்கள் நண்பர்களான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், பல கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருந்தும் அவர்கள் எத்தனை ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து கொரானா நோயை பரப்பிய சீனாவிற்கு ஆதரவாகவும், தப்லீக் ஜமாத் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பேசியும்,எழுதியும் வருவதைத் தவிர மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பதை தவிர வேறு என்ன நன்மை செய்துள்ளார்கள்.சீன அரசாங்கம் திட்டமிட்டு இந்த நோயைப் பரப்பி இது ஒரு ‘பயோ வார்’ என்கின்ற கண்ணோட்டம் சர்வதேசம் முழுவதும் உள்ளது. சீனாவிடம் நஷ்ட ஈடு கோரி பல நாடுகள் ஐநா மன்றத்தில் முறையிட தயாராகி வருகின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நீங்கள் சீன அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்கள். இதைவிட தேசத்துரோகம் வேறு என்னவாக இருக்க முடியும். நீங்கள் மனிதகுலத்திற்கு விரோதியாக மாறி வருகிறீர்கள் என்பதை மனசாட்சியோடு சிந்தித்தால் புரிந்து கொள்வீர்கள்.சோனியாவின் தாயகமான இத்தாலி சீன வைரஸ் நோய் மூலம் பல உயிர்களை இழந்துள்ளது.நல்லவேளை இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக பெற்றிருக்கின்றோம். நாடு பாதுகாப்பாக இருக்கிறது.அல்லும் பகலும் இந்த நாட்டிற்காக அயராது பாரதப் பிரதமர் மோடி உழைத்து வருகிறார். மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது அதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டுகின்ற இந்திய விரோதிகளின் செயல்பாட்டிற்கும், கருத்துக்களுக்கும், நீங்கள் ஆதரவாக ஒரு கடிதம் எழுதி சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்கு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்திற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேலாவது நீங்கள் மக்களோடு இருங்கள். தேசத்தை நேசியுங்கள்! மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளுகின்ற நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என அக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்..!
Leave your comments here...