கொரோனா தடுப்பு பணி : ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு 11 லட்ச ரூபாய் நிதியுதவி..!
ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு 11 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
It is my appeal to my fellow Indians,
Kindly contribute to the PM-CARES Fund. This Fund will also cater to similar distressing situations, if they occur in the times ahead. This link has all important details about the fund. https://t.co/enPvcqCTw2
— Narendra Modi (@narendramodi) March 28, 2020
அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் நிதி உதவி கோரியுள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் நிதி அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி வழங்கியுள்ளது. ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடியும், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, தவான், ரகானே, கவுதம் கம்பிர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள டிரஸ்ட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Shri Ram Janmbhoomi Teerth Kshetra trust, which has been set up to look after the construction of Ram Temple in Ayodhya, donates Rs 11 lakhs to PM-CARES Fund in fight against #CoroanvirusPandemic.
— ANI UP (@ANINewsUP) April 6, 2020
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள புதிதாக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு 11 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
Leave your comments here...