ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.!

தமிழகம்

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.!

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு  பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.!

ஈஷா யோக மையம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-தமிழகத்தில் இருந்து டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நண்பர்களுக்கு தொற்றுநோய் பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்து வருகிறது. மத்திய , மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தப்லீக் ஜமாத் என்கிற அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு. 1920களில் இந்தியாவில் துவங்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்ட பலருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவியுள்ளது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு சேலம் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று கொண்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தானாக முன்வந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசும் வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனால் இதில் பங்கேற்ற பலர் தங்களது செல்போனை ஆப் செய்து வைத்துவிட்டு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்ற இந்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கை என்று திசை திருப்புகின்றனர். இடதுசாரி ஊடகங்கள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் நக்சல் திராவிடர் கழகங்கள் சார்ந்தவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் உடன் கைகோர்த்துக்கொண்டு இந்த விஷயத்தை மேலும் மேலும் மாபெரும் மத பிரச்சனையாக உருக்கொடுத்து வருவதற்கு வழிவகை செய்கிறார்கள்.

இஸ்லாமியர்களில் பலர் மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தாலும் கம்யூனிஸ்டுகளும் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்களும் விடுதலை சிறுத்தை மற்றும் நாம் தமிழர் அமைப்பை சார்ந்தவர்கள் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள்.மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் மத்தியில் கட்டமைக்கிறார்கள். இதில் சில இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாந்து விடுகிறார்கள். கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரத்தில் ஒரு அங்கமாக ஊடகங்களில் ஊடுருவி வருகின்ற கம்யூனிஸ்ட் சிந்தனை உள்ள ஊடகவியலாளர்கள் திராவிடர் கழக, நக்சல் சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே இது விஷயத்தில் ஈஷா யோக மையத்தில் ஏன் சோதனை செய்யவில்லை. சிவராத்திரி விழாவில் பங்கேற்ற வெளிநாட்டவர்களிடம், ஏன் சோதனை நடத்தவில்லை போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.தமிழக முதலமைச்சரிடமே இத்தகைய கேள்வியை எழுப்பி இந்து சமய ஆன்மீக அமைப்புக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை செய்கின்றார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.

ஈஷா யோக மையத்தை சேர்ந்த எவரும் நோய்தொற்றுக்கு ஆளாகவில்லை. அப்படி ஆனாலும் அங்கும் இத்தகைய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். என்று பதில் கொடுத்திருக்கிறார். ஆனாலும்கூட கம்யூனிஸ்ட் நக்சல் ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே இத்தகைய பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறார்கள். தொடர்ந்து ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதில் ஊடகங்களில் பணியாற்றுகின்ற சில செய்தியாளர்களும் துணை போகின்றார்கள். இவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு,ஜனநாயக மாதர் சங்கம், உள்ளிட்ட அமைப்புகளும் துணை போகின்றன.

நல்லகண்ணு போன்ற பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர்களையும் தா பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களையும் இத்தகைய பிரச்சாரத்தில் இவர்கள் ஈடுபடுத்துகிறார்கள்.தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்களை தவறாக வழிநடத்தி, தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்கிட இந்த முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களை தமிழக உளவுத்துறை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈஷா யோக மையம் ஒரு அற்புதமான ஆன்மிக அமைப்பு, ஏராளமான தன்னார்வ தொண்டர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, ‘காவிரியின் கூக்குரல்’ என்கிற பிரச்சார இயக்கத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்துக் கொண்டு இருக்கின்ற அமைப்பு.

தமிழகத்தில் மரம் நடும் திட்டத்தின் மூலம் பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பசுமையாக்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற அமைப்பு. இயற்கை பேரிடர் காலங்களில் பல்வேறு விதமான சேவைகளை செய்து வருகின்ற அமைப்பு. தற்பொழுது கூட கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கின்ற ஈஷா யோக மையத்தை நோய்த்தடுப்பு மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம். என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் அறிவுறுத்தி வருகிறார். மக்களுக்கு யோக வாழ்க்கை முறையை போதித்து வரும் ஈஷா யோக மையத்தின் மீது களங்கம் சுமத்துகிறார்கள். அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்

Leave your comments here...