காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் – மத்திய அரசு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன; போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியவாசிய பணிகளை தவிர அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பெரும்பாலானோரின் ஓட்டுநா் உரிமங்கள், வாகன அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்டவை காலாவதியாகின. ஆனால், அவற்றைப் புதுப்பிப்பதற்கான அலுவலகங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால், வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Leave your comments here...