கொரோனா நிவாரண உதவி : அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு ஸ்டார் நடிகர்கள்! கிள்ளிக் கொடுக்கும் தமிழ் சூப்பர் ஸ்டார்கள்…!
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் நிதி உதவி கோரியுள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் நிதி அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடியும், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் பிரதமர் நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிதிக்காக தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார்.இளம் நடிகர்களான ராம் சரண் 70 லட்சம் ரூபாயும், மகேஷ் பாபு ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன், 1.25 கோடி ரூபாயும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசின் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளனர். பிரபாஸ், பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும் கொடுத்துள்ளார்.
இதேபோல் தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் தமிழ் பட நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI தொழிலாளர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் தனுஷ் 15 லட்சம் ரூபாய் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார். சூர்யா, சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியாக அளித்துள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதி கொடுத்துள்ளார். மாற்ற நடிகர்கள் தங்கள் முடிச்சை அவுக்கம்மால் உள்ளார்கள்.
மற்றொரு நடிகரான கமல்ஹாசனோ… டுவிட்டரில் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆழ்வார்பேட்டை வீட்டில் நோட்டீஸ் ஒட்டினால் பொங்கி அறிக்கை விடுகிறார்.கொரோனா வைரசால் தமிழகமே கடுமையான நெருக்கடி சூழலில் இருக்க… முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இவர்கள் ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை. ரசிகர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள்… மக்களின் ஒருவரான அந்த ரசிகர்களின் கஷ்டத்தில் பங்கெடுக்காமல் இருப்பது வெட்கக்கேடு.இது தற்போது டிவிட்டரில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பல நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.அதில் சில:-
தமிழ் நடிகர்கள் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி வச்சு இருப்பாங்களோ…கொரோனா நிதி, நீயும் கொடுக்காத,, நானும் கொடுக்க மாட்டேன்..ஸ்கூல் நேரத்தில் பசங்க பண்ற மாதிரி..டேய் மிஸ் கேட்டால் homework செய்யலைனு சொல்லு…
— Raj ᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ (@rajmdu82) March 30, 2020
Raj :- தமிழ் நடிகர்கள் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி வச்சு இருப்பாங்களோ…கொரோனா நிதி, நீயும் கொடுக்காத,, நானும் கொடுக்க மாட்டேன்..ஸ்கூல் நேரத்தில் பசங்க பண்ற மாதிரி..டேய் மிஸ் கேட்டால் homework செய்யலைனு சொல்லு…
கொரோனா தொற்றுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் எல்லாமே திரையில் பார்ப்பதற்கு மட்டும் தான் டயலாக் பேசுறாங்க உண்மையிலேயே ஒரு பிரச்சனை என்றால் வேடிக்கைதான் பார்க்கிறார்கள் கோடிக்கணக்கான பணம் சொத்துகளை சம்பாதித்து வைத்துக் கொண்டு நிவாரணநிதி கொடுக்க தயங்குவது என்ன காரணம் pic.twitter.com/Cc1NA0CE1E
— San.Manikandan (@manikandan_san) March 30, 2020
San Manikandan: கொரோனா தொற்றுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் எல்லாமே திரையில் பார்ப்பதற்கு மட்டும் தான் டயலாக் பேசுறாங்க உண்மையிலேயே ஒரு பிரச்சனை என்றால் வேடிக்கைதான் பார்க்கிறார்கள் கோடிக்கணக்கான பணம் சொத்துகளை சம்பாதித்து வைத்துக் கொண்டு நிவாரணநிதி கொடுக்க தயங்குவது என்ன காரணம்
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகர்கள் அவர்கள் ரசிகர்கள் மூலமாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க.. pic.twitter.com/4L57zYsdb1
— பண்ருட்டிவீரமணி. (@6C99N2iWnaLcgRS) March 29, 2020
பண்ருட்டிவீரமணி :- கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகர்கள் அவர்கள் ரசிகர்கள் மூலமாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க..
தமிழ் சினிமா நடிகர்கள் ஜோசப் விஜய், விஜய் சேதுபதி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை தலைமறைவு…
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்
ரூ.25 கோடி நிதியுதவி
#Corona_Virus #Relief_Fund #AkshayKumar #Bollywood pic.twitter.com/4hAxSo46f2— 🇮🇳🕉️⛳U.சுப்பிரமணி🔱ன்🚩 (@U48446405) March 28, 2020
U.சுப்பிரமணி:தமிழ் சினிமா நடிகர்கள் ஜோசப் விஜய், விஜய் சேதுபதி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை தலைமறைவு…
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி
Leave your comments here...