கொரோனா தடுப்பு பணி: மத்திய அரசுக்கு டாடா குழுமம் 1500 கோடி , நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி, பிசிசிஐ 55கோடி நிதியுதவி…!!
கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM
— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020
இந்நிலையில் டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி ரூபாயும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் ரூ.1000 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.1500 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Tata Sons announces an additional Rs. 1,000 Crores support towards #COVIDー19 and related activities. https://t.co/TOXo8Hn26I #TataNews #ThisIsTata
— Tata Group (@TataCompanies) March 28, 2020
இதைபோல் நடிகர் அக்ஷய்குமார் ரூ. 25 கோடி நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
This is that time when all that matters is the lives of our people. And we need to do anything and everything it takes. I pledge to contribute Rs 25 crores from my savings to @narendramodi ji’s PM-CARES Fund. Let’s save lives, Jaan hai toh jahaan hai. 🙏🏻 https://t.co/dKbxiLXFLS
— Akshay Kumar (@akshaykumar) March 28, 2020
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் அக்ஷய்குமார், “எல்லாமே மக்கள் உயிர் வாழ்வதற்காகத்தான். நாம் ஏதோவொன்றை செய்யவேண்டிய தேவை உள்ளது. என்னுடைய சேமிப்பிலிருந்து ₹25 கோடியை பிரதமர் நிதிக்கு அளிக்க உறுதியளிக்கிறேன். உயிர்களை காப்போம்” என்று தனது பதிவில் அக்ஷய்குமார் பதிவிட்டுள்ளார்.
NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
More details here – https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo
— BCCI (@BCCI) March 28, 2020
இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளின் படி கொரோனா நடவடிக்கைக்காக ரூ.51 கோடி நிதியுதவி அளித்துள்ளது
Leave your comments here...