கொரோனா வைரஸ் : தருமையாதீனம் ரூபாய்-11லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறார்…!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதன் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு கடந்த 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா நோய் தடுப்புக்கு தருமை ஆதீனம் 11,லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தல் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ தருமை ஆதீனத்தின் சார்பாக 27- தேவஸ்தானங்களில் சிறப்பு யாகங்கள் கூட்டு வழிபாடு திருமுறை பாராயணம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் ஆன்மீக அன்பர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்கள்.
Dharumapuram Adheenam Sri La Sri Gurumaha sannidhanam has donated INR 11 lakhs to the CM's Relief Fund. Daily prayers and spl poojas are offered in all temples under the adheenam. pic.twitter.com/WYhORDEFtg
— Dharumai Adhinam (@DAdhinam) March 27, 2020
இப்பெரும் பணிக்கு மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தன்னார்வலர்கள். சீரோடும் சிறப்போடும் மெய் வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் எந்திரமாய் பணியாற்றி வருகிறார்கள். அரசுக்கு இதனை சமாளிக்க பெரும் நிதி தேவைபடுகிறது. தருமை ஆதீனம் மற்றும் ஆதீன தேவஸ்தானங்களின் சார்பாக ரூபாய் 11லட்சம் தருமையாதீன 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முதலமைச்சர் பேரிடர் (பொது) நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.
மேலும் மக்கள் சுயக்கட்டுபாட்டோடு அரசின் விதிகளை பின்பற்றி தாங்களும் பாதுகாப்பாக இருந்து நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்கள். மக்கள் நோயின்றி தற்காத்து தன்நாடு காத்து வாழ ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திப்பதாக தெரிவித்தார்கள்.
Leave your comments here...