கொரோனா பரவல் எதிரொலி : ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் வழிபாடு – வெளுத்து வாங்கிய காவல்துறை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை இன்றுமேலும் 13 உயர்ந்து உள்ளது, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 593 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அபாயகரமான சூழலை பொதுமக்களும் உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.இருப்பினும் ஊரடங்கை பின்பற்றாமல் பொறுப்பற்ற ஒன்றுகூடுதல்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவது இந்தியாவில் கோவிட் வைரஸ் பாதிப்பை மேலும் மோசமாக்கும் நிலையில் உள்ளது. ஏற்கனவே மதவழிபாடு, பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவினால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் மக்கள் பெருமளவில் ஒன்று கூடி வழிபாடு நடத்தியுள்ளனர்.
#WATCH Police thrash people for violating #Coronaviruslockdown in Belgaum. The incident happened outside a Mosque when people were leaving after offering prayers. #Karnataka pic.twitter.com/tF9Vx4iqV5
— ANI (@ANI) March 26, 2020
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு உடனடியாக சென்று கூடியிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். கொரோனா மீதான போதிய விழிப்புணர்வும், பொறுப்புமின்றி பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருவது மிகவும் கவலையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கொரோனாவினால் இன்று கர்நாடகாவில் 2வது நபர் பலியாகியிருக்கும் நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 55ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...