அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும் – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
சீனாவின் ஊஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த வைரஸ், கணிக்க முடியாத அளவுக்கு அதிதீவிரமாக பரவி வருகிறது.
21 நாள் ஊரடங்கு உத்தரவின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், ஊரடங்கால் கூலித் தொழில் செய்வோர் உணவிற்கே அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனை கருத்தில் கொண்டு இதுவரை ரேஷன்களில் கிலோ 27 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த கோதுமையை இனி 2 ரூபாய்க்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்கப்படும் எனக் கூறிய அவர் இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றார். இத்திட்டம் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
Leave your comments here...