ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.! டாகர் ஷியாம் முகர்ஜி கனவு நிறைவேறி உள்ளது- ஹெச்.ராஜா.
- August 12, 2019
- admin
- : 1081
1952ல் ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவே அங்கு நுழைவதற்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை என்று கூறி Dr.முகர்ஜி அவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் பிரவேசித்தார். ஆனால் ஷேக் அப்துல்லா அரசாங்கம் 1953 ஜூன் 23ஆம் தேதி Dr.முகர்ஜியை பிணமாக நம்மிடம் ஒப்படைத்தது. இன்று ஜம்மு காஷ்மீர் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.Dr.முகர்ஜி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
மேலும் காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்துவோம் என்பதை உறுதி செய்துள்ளோம்.அங்கு உலக முதலீட்டாளர் மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காஷ்மீர் பெண் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அவரது சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளும்; குடியுரிமை ரத்து செய்யப்படும் போன்ற அவலங்கள் முடிவுக்கு வந்துள்ளன.இதை எதிர்க்கும் பிரிவினைவாத சக்திகள் புரிந்து கொள்ளும் விதத்தில் ‘இந்தியா ஒரே நாடு’ என உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி காஷ்மீரில் பட்டியல் இனத்தவர், பிற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். சமூக நீதி பற்றி சிந்திப்பவர்கள் இதை வரவேற்க வேண்டும், என்றார்.
Leave your comments here...