இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டு மொத்த நாடே 21 நாட்கள் முடக்கப்படுகிறது – பிரதமர் மோடி அறிவிப்பு..!!
கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார்.
அப்போது பேசிய அவர் :- வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Addressing the nation on battling the COVID-19 menace. #IndiaFightsCorona https://t.co/jKyFMOQO5a
— Narendra Modi (@narendramodi) March 24, 2020
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக போராடி வருகிறது.சைக்கிள் முறையில் பரவும் இந்த தொற்றை ஒழிக்க நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் அனைவரும் விலகியே இருக்க வேண்டும்.
இதற்கு நான் கூட விலக்கு அல்ல. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது. யாரும் கொரோனாவை ஒரு விளையாட்டாக நினைக்காதீர்கள். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களும் முடக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாம் கொரோனாவை வெல்ல முடியும் என்றார்..
Leave your comments here...