போன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 18 சதவீதமாக உயர்வு- நிர்மலா சீத்தாராமன்..!!
டெல்லியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 39-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதி மந்திரிகள், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். செல்போன், ஜவுளி, காலணி, உரம், சூரிய சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Union Minister for Finance & Corporate Affairs Smt. @nsitharaman chairing the 39th GST Council meeting in New Delhi today. pic.twitter.com/asjeeQfL6C
— Ministry of Finance (@FinMinIndia) March 14, 2020
மேலும், லாட்டரி சீட்டு பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும், ஜிஎஸ்டி வரி பிடித்தத்தை திரும்ப பெறும் புதிய முறையை எளிமைப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- செல்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் 12%இல் இருந்து 18% ஆக உயர்த்தப்படும்.செல்போனில் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் 12% இருந்து 18% ஆக உயர்த்தப்படும். கைகள் மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு ஜி.எஸ்.டி 12% ஆக நிர்ணயம் செய்யப்படும்.
ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு-குறு நிறுவனங்கள், 2018-19 நிதி ஆண்டில் ஜிஎஸ்டிஆர்-9 சி ஆவணம் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ரூ.2 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் மீதான காலதாமத அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்றார்.
Leave your comments here...