தலித் மக்கள் குறித்து அவதூறு பேச்சு: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு!
தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு கூட்டம் ஒன்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, “ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...