கோவை இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் சம்பவம் : போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் – போலீசார் அறிவுறுத்தல்..!
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த்(33) என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வெள்ளியன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.இந்நிலையில் நேற்று அறிவித்தப்படி கோவையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கோவை கிளர்ந்தெழுந்தது.
சந்தர்ப்பவாத அரசியல் கழிசடைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
மக்களின் நாடித்துடிப்பு தேசியத்தின் பக்கம் என்பது நிரூபிக்கப்பட்டது.
காவல்துறையும் நீதித்துறையும் பணிந்து போகின்ற சூழ்நிலையில் மக்கள் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் உடையவர்கள் என்பது உணர்த்தப்பட்டது. pic.twitter.com/4bBGsbmZJ5— Hindu Munnani (@hmrss1980) March 7, 2020
மாநகரில் உள்ள டீகடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 300 மத்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பதட்டமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தொடர்ந்து இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தும் கயவர்களை கண்டித்து இந்து அமைப்புகளின் அழைப்பை ஏற்று கோவை மாவட்டம் முழுவதும் வணிகர்கள் இன்று கடையடைப்பு மாபெரும் வெற்றி 🚩🙏🇮🇳 pic.twitter.com/LjfTbkRLlk
— Krishnan Yayati BJP (@BjpYayati) March 7, 2020
இந்த சம்பவம் கோவையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பாஜக இந்து முன்னணி உள்பட இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர பகுதியில் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட இந்து இயக்கங்களை சேர்ந்த 15 தலைவர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல புறநகர் பகுதியில் உள்ள 22 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்து இயக்க தலைவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அந்த போலீஸ் நிலைய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
Leave your comments here...