டெல்லி வன்முறை : “ஏஷியாநெட் – மீடியா 1” மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு தடை..!!

இந்தியா

டெல்லி வன்முறை : “ஏஷியாநெட் – மீடியா 1” மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு தடை..!!

டெல்லி வன்முறை : “ஏஷியாநெட் – மீடியா 1” மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு தடை..!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


இந்த வன்முறை தொடர்பாக விவாதம் நடத்தக் கோரியும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால் 5வது நாளான நேற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது. அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும், மார்ச் 11ம் தேதி காலை 11 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் டெல்லி வன்முறையை ஒளிபரப்பிய கேரள டிவி சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏஷியாநெட் செய்தி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.இந்த தடை, இன்று(மார்ச் 6) இரவு 7.30 மணி முதல் 8ம் தேதி இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.


இந்த இரு டிவி சேனல்களும், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஒளிபரப்பியதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக ஒளிபரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேண்டுமென்றே சிஏஏ ஆதரவாளர்கள் வன்முறை நடத்தியதாக மட்டும் ஒளிபரப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஏஷியாநெட் நியூஸ் டிவி, மீடியா ஒன் டிவி ஆகிய இரு மலையாள மொழி செய்தி சேனல்களும் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளன.

Leave your comments here...