சாந்தோம் சர்ச் அருங்காட்சியத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும்- முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்த இந்து மக்கள் கட்சி…!

தமிழகம்

சாந்தோம் சர்ச் அருங்காட்சியத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும்- முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்த இந்து மக்கள் கட்சி…!

சாந்தோம் சர்ச் அருங்காட்சியத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும்- முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்த இந்து மக்கள் கட்சி…!

கடந்த மாதம் 28ம் தேதி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்சிற்கு காலை சென்றுள்ளார். பின்னர் சர்ச் ஊழியர்களிடம், ‘‘இங்குள்ள அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும். அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கோயிலில் இருந்த பொருட்கள் என சொல்கிறார்கள். எனவே நான் அதை பார்க்க வேண்டும். உங்கள் பாதிரியாரை கூப்பிடுங்கள். நான் பேச வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மேலும்,சர்ச் கட்டுவதற்கு முன்பு இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்தது. அந்த இடத்தில் தான் தற்போது தேவாலயம் உள்ளது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.ஆனால் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருந்ததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு சர்ச் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளர்கள் அதன்பேரில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.


இந்நிலையில் இந்துமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பிரதீப்குமார்(கொக்கிகுமார்) நிர்வாகிகளுடன் இன்று சாந்தோம் சர்ச் பேராயரிடம் அருங்காட்சியகத்தை பார்வையிட நேரம் ஒதுக்கி அனுமதி தருமாறு கேட்டு சென்று உள்ளார்கள். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டடதாக கூறியுள்ளார் கொக்கிகுமார். மேலும் இது தொடர்பாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அவர்களை சந்தித்து மனு கொடுப்பதாக கூறியுள்ளார்கள்.


பின்னர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில்:- அனைவரும் பார்க்க கூடிய சாந்தோம் அருங்காட்சியகத்தை எங்களை மட்டும் பார்க்க விடாத நோக்கம் மிகவும் தவறாக தெரிகிறது. இது அந்த அருங்காட்சியகத்தை சர்ச் நிர்வாகம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் கீழடியில் நடப்பதை போன்று மேற்குறிப்பிட்ட அருங்காட்சியகத்தையும் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அர்ஜூன் சம்பத் அருங்காட்சியகத்தை பாதுகாப்புடன் பார்வையிட காவல்துறை நேரம் ஒதுக்கி அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Leave your comments here...