பாதிரியார் ராபின் வடக்கன்சேரி பொறுப்பில் இருந்து நீக்கம் – சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டு – போப் பிரான்சிஸ் நடவடிக்கை
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டுஇங்குள்ள, வயநாடு மாவட்டத்தில், மனன்தவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில், ராபின் வடக்கன்சேரி, 48,என்பவர் பாதிரியாராக இருந்தார்.
சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை, பாதிரியார் ராபின் வடக்கம் சேரி, பாலியல் பலாத்காரம் செய்து, கருவுறச் செய்தததாக மூன்று ஆண்டுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிரியார் பொறுப்பில் இருந்து, அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.இந்த வழக்கில், அவருக்கு,20 ஆண்டு சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த ஆண்டு, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சர்ச் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: பாதிரியாருக்கான கடமைகளை செய்ய ராபின் ராபின் வடக்கன்சேரிக்கு தடை விதித்தும், பாதிரியாருக்கான உரிமைகளை அவரிடம் இருந்து பறித்தும் போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இனி, அவர் பாதிரியாராக கருதப்படமாட்டார் என கூறப்பட்டு உள்ளது.
Leave your comments here...